விஜய் 63வது படம் குறித்து வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம்!

அட்லீ-விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது.

விஜய் 63வது படம் குறித்து வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம்!
அட்லீ-விஜய்

அட்லீ-விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது.

விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு ஸ்டூடியோவில் பெரிய செட் போட்டு எடுக்கப்படுகிறது.

படப்பிடிப்பின் ஒரு செட் புகைப்படம் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இப்போது படம் குறித்து சமீபத்தில் ஒரு செய்தி உலா வந்தது. அதாவது விஜய்யின் 63வது படம் தீபாவளிக்கு பதிலாக ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என்று தான்.

ஆனால் அந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முற்றிலுமாக மறுத்துள்ளார்.