விஜய்64 ஹீரோயின் யார்? இப்போதே ஆரம்பித்த பரபரப்பு

நடிகர் விஜய் அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தளபதி63 ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் இந்த செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

விஜய்64 ஹீரோயின் யார்? இப்போதே ஆரம்பித்த பரபரப்பு
விஜய்64

நடிகர் விஜய் அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தளபதி63 ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் இந்த செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மற்றொருபுறம் இந்த படத்தின் ஹீரோயின் யார் என இப்போதே பேசஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக சமந்தா, கீர்த்தி சுரேஷ் என்று பழைய காம்பினேஷனை ஒத்துவைத்துவிட்டு தெலுங்கில் சென்சேஷன் ஆன ரஷ்மிகா மந்தனாவை படக்குழு அணுக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை, ஆனால் வாய்ப்பு தான் வரவில்லை என ரஷ்மிகா இதற்கு முன்பே ட்விட்டரில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.