வெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி சேரும் அசுரன் தனுஷ்!

தனுஷ் நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது.

வெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி சேரும் அசுரன் தனுஷ்!
தனுஷ்

தனுஷ் நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், இயக்குனர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட திறமையாளர். இவர் நடிப்பில் நேற்று வெளியான மாரி 2 படம் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், தனுஷ் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் " ரசிகர்களிடமிருந்து மாரி 2 படத்தின் வெற்றிச் செய்தி வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, எனது அடுத்த படம் குறித்து இப்போது அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடிக்கிறேன். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வட சென்னை ஆகிய படங்கள் ஏற்கனவே வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. வடசென்னை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் நான்காவது படமாக அசுரன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அசுரன்