விஸ்வாசம் கதை என புதிதாக உலா வரும் ஒரு செய்தி!

அஜித்-சிவா கூட்டணியில் 4வது முறையாக வெற்றிகரமாக வெளியாக போகும் படம் விஸ்வாசம். தலயின் ரசிகர்கள் படத்திற்காக படு வேலைகள் செய்து வருகின்றனர்.

விஸ்வாசம் கதை என புதிதாக உலா வரும் ஒரு செய்தி!
விஸ்வாசம்

அஜித்-சிவா கூட்டணியில் 4வது முறையாக வெற்றிகரமாக வெளியாக போகும் படம் விஸ்வாசம். தலயின் ரசிகர்கள் படத்திற்காக படு வேலைகள் செய்து வருகின்றனர்.

ரிலீஸ் கவுண்டவுன் டாக் டிரண்டிங், பாடல்கள் டிரண்ட் என சமூக வலைதளத்தை கலக்கி வருகிறது. ஏற்கெனவே இப்பட கதை இதுதான் என செய்திகள் வந்த நிலையில் புதிதாக ஒரு கதை உலா வருகிறது.

படத்தில் பெரிய தாதாவாக அஜித் நடிக்கிறாராம், திருமணம் செய்தால் தாதாவாக போகமாட்டார் என்று நயன்தாராவிடம் நல்ல பையன் என பொய் சொல்லி திருமணம் செய்கிறார்களாம்.

பின் உண்மை தெரிய நயன்தாரா பிரிந்து போய் ஒரு தொழில் செய்கிறாராம். அதில் அவருக்கு பிரச்சனை ஏற்பட அஜித் காப்பாற்றுகிறார் இதுதான் கதை என்கின்றனர். படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இதுதான் கதையா என்ற சந்தேகம் வரும், ஆனால் உண்மையில் சிவா என்ன கதை எழுதியுள்ளார் என்பதை அறிய பொங்கல் வரை காத்திருப்போம்.