விஸ்வாசம் படத்தின் கதை இதுதானா?

சிவா எப்போதுமே தன்னுடைய படத்தில் சொந்தங்களுக்குள் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் வகையிலேயே படம் எடுப்பார்.

விஸ்வாசம் படத்தின் கதை இதுதானா?
விஸ்வாசம்

சிவா எப்போதுமே தன்னுடைய படத்தில் சொந்தங்களுக்குள் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் வகையிலேயே படம் எடுப்பார்.

அது அஜித்திற்கும் செட் ஆக தொடர்ந்து அவருடைய இயக்கத்திலேயே நடித்து வருகிறார், இப்போது விஸ்வாசம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த நேரத்தில் படத்தின் கதை இதுதான் என்று ஒரு குட்டி கதை சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

என்ன கதை என்றால், விவசாயியாக அஜித் படத்தில் நடிக்கிறாராம், சிட்டிக்கு வந்து அங்கு விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை அங்குள்ள மக்களுக்கு கூறுவாராம். மொத்தத்தில் இப்படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கூறும் படமாக இருக்கும் என கூறுகிறது சமூக வலைதளத்தில் வைரலான அந்த கதை.

இப்போது உள்ள சூழ்நிலையில் விவசாயம் குறித்து அதுவும் அஜித் நடிக்க இப்படம் வருமேயானால் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும். ஆனால் எது உண்மை என்பது படம் வந்தால் மட்டுமே தெரியும்.