ஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா சேச்சி குமுறல்

படப்பிடிப்பின்போது தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ரிச்சா சட்டா தெரிவித்துள்ளார்.

ஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா சேச்சி குமுறல்
ரிச்சா சட்டா

படப்பிடிப்பின்போது தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ரிச்சா சட்டா தெரிவித்துள்ளார்.

ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளதன் மூலம் பிரபலமாகியுள்ளார் ரிச்சா சட்டா. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் அதை பற்றி பேச வைத்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிச்சா சட்டா கூறியதாவது,

நான் ஒரு படப்பிடிப்பின்போது தொப்புளுக்கு மேல் வரை உள்ள பேண்ட் அணிந்திருந்தேன். உடனே என்னை அழைத்து தொப்புள் தெரியும்படி பேண்டை இறக்கிவிடுமாறு கூறினார்கள். அந்த பேண்ட் அணிந்து எப்படி தொப்புளை காட்ட முடியும்?. ஆனாலும் அவர்கள் அப்படி நேரடியாக கூறியதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. இதற்கு பாலிவுட் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி துணிச்சலாக பேசும் பெண்கள் நடத்தப்படும் விதம் தான் தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த தனுஸ்ரீ தத்தாவின் நிலையை பாருங்கள்.

ஒரு கன்னியாஸ்திரி போராட்டம் நடத்தினால் அவரின் கேரக்டர் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அவரை பாலியல் பலாத்காரம் செய்த நபரை கொண்டாடுகிறார்கள். பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது புகார் அளிக்க பெண்கள் முன்வர மாட்டார்கள் என்கிறார்கள். ஆனால் அப்படி முன்வந்தவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்று நீங்களே பாருங்கள்.

சில இயக்குனர்களுக்கு படம் இயக்குவதில் ஆர்வம் இல்லை. அவர்களுக்கு வேறு விஷயத்தில் தான் ஆர்வம் அதிகம். பெண்களை சதையாக மட்டும் பார்க்கிறார்கள். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால் பெண்களாலும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்கிறார் ரிச்சா சட்டா.