நடிகை ஹன்சிகா மீது வழக்கு பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஹன்சிகா நடிப்பில் அடுத்து உருவாகும் படம் மஹா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து வைரலானது.

நடிகை ஹன்சிகா மீது வழக்கு பதிவு
ஹன்சிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஹன்சிகா நடிப்பில் அடுத்து உருவாகும் படம் மஹா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து வைரலானது.

அதில் ஹன்சிகா காசி கோயில் பின்னணியில் இருக்க புகைபிடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். அந்த போஸ்டர் தற்போது ஹன்சிகாவுக்கு சிக்கலை கொண்டுவந்துள்ளது.

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகை பிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக கட்சி தான் தற்போது ஹன்சிகா படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஹன்சிகா மீது இதற்காக அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

"இந்து மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. அதனால் ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுள்ளனர்.

ஹன்சிகா

ஹன்சிகா