ஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்?

ஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்?
ஆலியா பட்

நடிகை ஆலியா பட் தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்துள்ள கலங்க் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அதன் விளம்பரத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இயக்குனர் ராஜமௌலியின் RRR படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஆலியா பட் காலடி எடுத்து வைக்கிறார். அதுபோல ஹாலிவுட் சினிமாவிலும் நுழைய ஆசையா என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டபோது, "அங்கு செல்லவேண்டும் என்று எனக்கும் ஆசை தான். ஒரு முற்றிலும் மாறுபட்ட சினிமா துறையில் நுழைவது அது."

"அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நேரம் எடுத்து பொறுமையாக ஹாலிவுட்டில் நடிப்பேன்|" என பதில் அளித்துள்ளார்.