2.0 உண்மையான பட்ஜெட் எவ்வளவு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷங்கர்

2.0 உண்மையான பட்ஜெட் எவ்வளவு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷங்கர்
ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் மிக ப்ரமாண்டமாக இயக்கியுள்ள 2.0 படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இந்தியாவே மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் 600 கோடி என பரவலாக பலரும் பேசிவரும் நிலையில் ஷங்கர் தற்போது 2.0 படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு என தெரிவித்துள்ளார்.

"உண்மையான பட்ஜெட் தயாரிப்பாளருக்கு தான் தெரியும். எனக்கு தெரிந்தவரை தயாரிப்பு செலவு 400 முதல் 450 வரை இருக்கும். அது தவிர தயாரிப்பாளரின் மற்ற விளம்பர செலவுகள் தனி" என கூறியுள்ளார் ஷங்கர்.