பிரபல நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க அசைப்படும் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளவர்.

பிரபல நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க அசைப்படும் நடிகர் விஜய்!
கியாரா அத்வானி

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளவர்.

இவர் தெலுங்கில் வெளியான பெல்லி சூப்புலு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பின் இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானார், மேலும் இப்படம் தமிழில் அத்தியா வர்மா மற்றும் ஹிந்தியில் கபிர் சிங் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இவர் பைட்டர் எனும் நேரடி ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தேவராகொண்டா தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிரபல நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க ஆசை என கூறியுள்ளார்.

இது குறித்து கூறுகையில் “நான் எந்த பாலிவுட் நடிகைகளுடன் உடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். குறிப்பாக நடிகை கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் உடன் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மேலும் நல்ல நடிகையாக இருந்தால் யாருடனும் நடிக்க ஒப்புக்கொள்வேன். எந்த சினிமா துறையாக இருந்தாலும் சரி எனக்கு அது பிரச்சனை இல்லை” என கூறியுள்ளார்.