நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
முதலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த நடிகை பிரியா, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதன்பின் மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பிரியா, தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமான மாஃபியா சாப்டர் 1 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளதால், திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் ரசிகர்களுடன் இணையதளத்தில் உரையாடல் நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகை பிரியாவும் இணைந்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரியா " நான் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போது, ரூ. 360 சம்பளமாக பெற்றுளேன்" என கூறியுள்ளார்.






