இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகை ராசி கன்னா!

தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் நடிகை ராசி கன்னா. முதன் முதலில் அதர்வா நடித்து வெளிவந்த இமைக்க நொடிகள் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.

இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகை ராசி கன்னா!
ராசி கன்னா

தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் நடிகை ராசி கன்னா. முதன் முதலில் அதர்வா நடித்து வெளிவந்த இமைக்க நொடிகள் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதன்பின் அடங்க மறு, அயோக்கிய, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மணை படத்தின் 3ஆம் பாகத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.

அண்மையில் இவர் நடித்து வெளிவந்த படம் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' இப்படத்தில் நடிகை ராசி கன்னா, முகம் சுழிக்கும் சில கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார்.

தான் ஏன் இந்த கதாபாத்திரம் நடிக்கிறேன் என்பதற்கு பதிலளிக்கும் விதத்தில் ராஷி கண்ணா கூறியது "நான் எல்லை மீறும் காட்சிகளில் நடிக்க மாட்டேன், அதே சமயத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருந்தால் நான் பொறுத்துக்கொள்ளவும் மாட்டேன்".

மேலும் "அந்த மாதிரியான காட்சிகள் இருந்தால், அந்த காட்சி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்தால், இந்த காட்சி தேவையா என்று இயக்குனரிடம் நானே கேட்பேன். சில நேரத்தில் அந்த காட்சி தேவையில்லை என்று சொல்லி விடுவார்கள். சில நேரத்தில் அந்த காட்சி கதைக்கு தேவைப்பட்டால் என்னுடன் வாக்குவாதம் செய்வார்கள். எது எப்படி இருத்தலும் என்னுடைய கருத்தை நான் சொல்லாமல் இருந்தது இல்லை" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.