தவறாக பேசிய நபருக்கு சரியான பதிலடி கொடுத்த பிக் பாஸ் ரித்விகா!

தமிழில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்விகா.

தவறாக பேசிய நபருக்கு சரியான பதிலடி கொடுத்த பிக் பாஸ் ரித்விகா!
ரித்விகா

தமிழில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்விகா.

இதன்பின் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த மெட்ராஸ் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து ரஜினியின் கபாலி, விக்ரமின் இருமுகன் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ரித்விகா.

ஆனால், பிக் பாஸ் சீசன் 3யில் வந்த பிறகு தான் இவருக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மனதில் இவரால் சம்பாதிக்க முடிந்தது என்று கூட கூறலாம்.

இவர் அந்த போட்டியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் அந்த சீசனின் வெற்றியாளருவும் மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு நபர் ஒருவர் "ஐயோ பாவம் பட வாய்ப்பு இல்லாம வெட்டிய இருக்காங்க" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் "மூடிக்கிட்டு போடா" என்று நடிகை ரித்விகா ரிப்ளை செய்துள்ளார்.