தளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட நல்ல பழக்கம்

தளபதி விஜய் பிகில் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட நல்ல பழக்கம்
லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் பிகில் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் அவருடன் நடிகர் விஜய் சேதுபதி மேலும் பல நடிகர்களும் நடித்துள்ளனர்.

மேலும் இப்படம் வெளியாகவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. மேலும் ஒரு பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார்.

அதில் "அவர் ஷூட்டிங் வந்தவுடன் முதல் வேலையாக அவர் செய்வது எல்லோரையும் சந்தித்து Wish பண்ணுவார், அதன் பிறகு இன்னிக்கு என்ன வேலை செய்யப்போகிறோம் என கேட்பார்.

இதற்கு முன் நான் அது போல் செய்தது இல்லை, ஆனால் அதை அவரிடம் இருந்து கற்று கொண்டு நானும் அதை தொடர ஆரம்பித்து விட்டேன்" என கூறியுள்ளார்.