மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

சமீபத்தில் விஜய் தனது மாஸ்டர் படத்தில் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது வருமான வரித்துறையினர் அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்ததை நாம் அறிவோம்.

மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
மாஸ்டர்

சமீபத்தில் விஜய் தனது மாஸ்டர் படத்தில் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது வருமான வரித்துறையினர் அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்ததை நாம் அறிவோம்.

அதன்பின் 24 மணி நேர சோதனைக்கு பிறகு விஜய்யிடம் இருந்து எந்த ஆவணமும் கைபெற முடியாத நிலையில் வருமான வரித்துறை திரும்பி சென்றதையும் நாம் பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சோதனை நேற்று மாலையில் இருந்து நடந்து வருவதாகவும் தற்போது தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதனால் மீண்டும் ரசிகர்கள் இடையே மிக பெரிய அதிர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது என்று தான கூறவேண்டும்.