விஜய் அடுத்து படம் இவருடன் தான்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். தற்போது இப்படத்தின் டப்பிங் வேளைகளில் விஜய் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

Mar 5, 2020 - 14:06
 0
விஜய் அடுத்து படம் இவருடன் தான்?
விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். தற்போது இப்படத்தின் டப்பிங் வேளைகளில் விஜய் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

இதனை தொடர்ந்து விஜய் சுதா கே பிரசாத்தின் இயக்கத்தில் நடிக்க போவதாகவும் அவரிடம் விஜய் கதை கேட்டதாகவும் சில தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

ஆனால் நேற்று கிடைத்த தகவலின் படி விஜய்யின் 65 படத்தை சுதா இயக்க வில்லை என்பது தான். இவர் இயக்க வில்லை என்றால் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அதற்கு முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் தான் என்று சமூக வலைதங்களில் சிலரால் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இது ஒரு புறம் இருக்க இயக்குனர் சுதா தற்போது சிம்புவை வைத்து தான் தனது அடுத்த படத்தை இயக்க போகிறார் என்பதுபோல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor