முதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய அளவில் அறியப்படும் பிரபலமான நடிகையாக விளங்குபவர்.

முதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய அளவில் அறியப்படும் பிரபலமான நடிகையாக விளங்குபவர்.

இவர் தமிழில் நடிகர் விகரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

அதன்பின் ரஜினிமுருகன், தொடரி போன்ற திரைப்படங்களில் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதனன தொடர்ந்து பல முன்னணி கதாநாயகளுக்கு ஜோடியாக நடித்து, தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மேலும், தற்போது இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான மஹாநடி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் சர்கார், அதன்பின் தமிழ் திரைப்படங்களில் நடிக்காலம் இருந்து வந்த இவர் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஆனால், திரைப்படத்தில் அல்ல விளம்பர படத்தில், மிகவும் பரம்பாரிய உடையில் தோன்றியுள்ள கீர்த்தி சுரேஷின், அந்த விளம்பர படம் தற்போது சமுக வலைத்தளத்தில் பரவி வருகிறது.