கீர்த்தி சுரேஷின் பென்குயின் என்ன மாதிரியான படம்?

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பெண்குயின்.

கீர்த்தி சுரேஷின் பென்குயின் என்ன மாதிரியான படம்?
கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பெண்குயின்.

பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படமும் நேரடியாக OTT-யில் வெளியாகவுள்ளது. பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை தொடர்ந்து பெண்குயின் திரைப்படமும் அமேசான் பிரைம்-ல் ஜூன் 19 தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

இதை நாம் முன்பே அறிவித்து இருந்தோம், இப்படம் செம்ம திகில் திரில்லர் கதையம்சம் கொண்டதாம்.