மாஸ்டர் மாளவிகா மோகனனின் அடுத்த ஸ்பெஷல்!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் கடந்த வருடம் வைரஸ் என்ற படம் மலையாளத்தில் வெளியானது.

மாஸ்டர் மாளவிகா மோகனனின் அடுத்த ஸ்பெஷல்!
மாளவிகா மோகனன்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் கடந்த வருடம் வைரஸ் என்ற படம் மலையாளத்தில் வெளியானது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை மிகவும் பாதித்த நிஃபா வைரஸ் தாக்குதலை மையமாக கொண்டு இப்படத்தை ஆஷிக் அபு இயக்கி இருந்தார்.

இப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிகை ரீமா கல்லிங்கல் நடித்ததுடன் படத்தையும் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வருடமும் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் என்கிற தாக்குதல் கேரளா மட்டுமில்லாமல் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்து வருகிறது. இச்சமயத்தில் வைரஸ் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது என பதிவிட்டிருந்தார்.

அதே வேளையில் நடிகை மாளவிகா மோகனன் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்கும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டிருந்தார்.

இதனால் இரண்டாம் பாகத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.