தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ்!

மாஸ்டர் படம் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் தான் இயக்கியுள்ளார்.

தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ்!
மாஸ்டர்

மாஸ்டர் படம் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் தான் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகன், ஸ்ரீமன் மற்றும் பல யு-டியுப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அதோடு பிரபல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனா நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளதாம், அதை அதிகாரப்பூர்வமாக லோகேஷே தெரிவித்துள்ளார்.

மேலும், அதோடு ‘ஒரு இமாலயா ப்ராஜெக்ட் 129 நாட்களில் முடிக்க என்னுடைய டீம் தான் முக்கிய காரணம், அவர்களுக்கு நன்றி.

என்னை நம்பி இவ்வளவு பெரிய படத்தை கொடுத்ததற்கு விஜய் அண்ணாவிற்கும் நன்றி’ என லோகேஷ் தெரிவித்துள்ளார்.