தளபதி விஜய்யுடன் படம் செய்ய முருகதாஸ் இதை செய்தே ஆகவேண்டுமாம்!
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. தற்போது இயக்குனர் முருகதாஸிடம் மட்டும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இந்த பேச்சு வார்த்தையில் தான் தற்போது புதிய திருப்பம் ஒன்று வந்துள்ளது.
அது வேறு ஒன்றுமில்லை, முருகதாஸ் கேட்கும் சம்பளம் தான், ஆம் முருகதாஸ் தரபார் படத்திற்கு பல கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளார்.
அந்த சம்பளத்தை விஜய் படத்தில் எதிர்ப்பார்க்க முடியாது, இதற்கு ஓகே என்றால் அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை என்று கூறி வருகிறார்களாம்.