நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில் அளித்த ஹன்ஷிகா மோத்வானி!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி.

நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில் அளித்த ஹன்ஷிகா மோத்வானி!
ஹன்ஷிகா மோத்வானி

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி.

இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாகினார்.

ஆனால் தற்போது நடிகை ஹன்ஷிகாவிற்கு கைவசம் மஹா எனும் ஒரே திரைப்படம் தான் உள்ளது.

அப்படத்தில் நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் லாக்டோவ்ன் செய்யபட்டுள்ளதால், நடிகை ஹன்ஷிகா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் உரையாடல் மேற்கொண்டுள்ளார்.

அப்போது ஒரு ரசிகர் நடிகர் விஜய் குறித்து மூன்றே வார்த்தையில் கூறுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு நடிகை ஹன்ஷிகா "சிறந்த நடிகர், பணிவான மனிதர், உண்மையானவர் என நச்சுனு வேறும் மூன்றே வார்த்தையில் பதிலளிதுள்ளார்.