முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் டாக்டர் படத்தின் பிரியங்கா!

சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் டாக்டர் படத்தின் பூஜை சமீபத்தில் முடிவடைந்தது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரோடக்சன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.

Mar 2, 2020 - 18:32
 0
முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் டாக்டர் படத்தின் பிரியங்கா!
பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் டாக்டர் படத்தின் பூஜை சமீபத்தில் முடிவடைந்தது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரோடக்சன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் நீண்ட நாட்களாக சிவகார்த்திகேயனுடன் இணையாமல் இருந்த அனிருத், டாக்டர் படத்துக்கு இசையமைக்கிறார்.

யோகி பாபு காமெடியனாகவும், நடிகர் வினய் வில்லன் வேடத்திலும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் அறிவிப்பு குறித்த மோஷன் போஸ்டர் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.

முழுவதும் காமெடி கலந்த அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த படத்தின் பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள அமுல் பேபி போல் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor