மீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான ராஷ்மிகாவின் புகைப்படம்!

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகை. மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, நானி என்று முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து வருகின்றார்.

மீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான ராஷ்மிகாவின் புகைப்படம்!
ராஷ்மிகா

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகை. மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, நானி என்று முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ராஷ்மிகா அடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கவுள்ளதாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது.

தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் ராஷ்மிகா நடித்து வருகின்றார்.

இதை தொடர்ந்து சூர்யா படம் ஒன்றிலும் இவர் நடிக்கவுள்ளதாக சில செய்திகள் கசிந்தது, எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில் ராஷ்மிகா எப்போது இணையத்தில் தன் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிடுவார்.

ஆனால், சமீப காலமாக இவர் எந்த போஸ் கொடுத்தாலும் ,அதை வடிவேலுவை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

இதை அவரும் செம்ம ஜாலியாக எடுத்துக்கொண்டு ஷேர் செய்தார், அப்படி தற்போது ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

அதையும் வடிவேலுவுடன் வைத்து ரசிகர்கள் கலாய்த்துள்ளனர், அதை நீங்களே பாருங்களேன்...