மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இப்படிப்பட்ட கதாபாத்திரமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது முழு மூச்சாக நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இப்படிப்பட்ட கதாபாத்திரமா?
மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது முழு மூச்சாக நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே. சூர்யா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள் டுவிட்டரில் வெளிவந்துள்ளது.

இதில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, மனோஜ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிகின்றனர்.

மேலும் அப்புகைப்படத்தில் குறிப்பாக பார்த்தல் நடிகர் மனோஜ் காவல் துறை அதிகாரியின் உடையை அணிந்துள்ளார். ஆகவே அவர் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் போலீஸ் அதிகாரியாக தான் நடித்து வருகிறார் என்று கிசுகிசுப்பட்டு வருகிறது. அதைபோல் அவரும் Shave செய்து போலீஸ் போலவே தெரிகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்...