மாநாடு படத்தில் கெஸ்ட் ரோலில் சீமான்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து சிம்பு நடிக்க துவங்கிய படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

மாநாடு படத்தில் கெஸ்ட் ரோலில் சீமான்?
மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து சிம்பு நடிக்க துவங்கிய படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ், எஸ்.ஜே. சூர்யா, பிரேம்ஜி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இப்படத்தின் பூஜையில் நடிகர் மற்றும் இயக்குனரனுமான சீமான் கலந்து கொண்டார். மேலும் இப்படத்தில் நடித்து வரும் நடிகர் உதயா தனது டுவிட்டர் பக்கத்தில் மாநாடு படப்பிடிப்பு தளத்தில் இருந்து சீமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது இப்படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலாக நடித்து வருவதாக சமூக வலைதங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இதனை குறித்து இந்த படத்தில் சீமான் நடிக்கிறார் என்று எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.