வலிமை படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடக்கிறது!

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பில் முழு மூச்சாக நடித்து வருகிறாராம் அஜித்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடக்கிறது!
வலிமை

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பில் முழு மூச்சாக நடித்து வருகிறாராம் அஜித்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாவும் சில தகவல்கள் இணையத்தில் கசிந்தது.

சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனை குறித்து ஒரு விடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

ஆனால் அந்த வீடியோ வெளிவந்த சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோவில் இருப்பவர் அஜித் இல்லை என்று தெரியவந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரியவந்த நிலையில் தற்போது இப்படத்தின் படடப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருவதாகவும், இதுவரை 65% சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் தல அஜித்தின் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய உச்சத்தை தொட்டுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.