தளபதி விஜய் நடிக்கும் 'ராயப்பன்'

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.

தளபதி விஜய் நடிக்கும் 'ராயப்பன்'
ராயப்பன்

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.

தளபதி 67 -> தளபதி 68

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணையவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காக தான், விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படதிற்கு பின் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை பற்றிய பேச்சு, சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

அண்மையில் கூட, பிகில் பட ராயப்பன் கதாபாத்திரம் ஒரு படமாக வெளிவந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டு, அமேசான் ட்விட்டரில் பதிவு செய்திருந்தது. இதற்கு அட்லீ செஞ்சுட்டா போச்சு என்று பதிவு செய்திருந்தார்.

இதனை வைத்து பார்க்கும் பொழுது, தளபதி 68 படத்தை அட்லீ இயக்கப்போகிறார் என்பது போல் திரை வட்டாரத்தில் பேசத்துவங்கிவிட்டனர்.

மேலும், சமீபத்தில் வெளிவந்த செய்தியை வைத்து பார்க்கும் பொழுது, இப்படத்திற்கு பிகில் 2, அல்லது ராயப்பன் என்று கூட தலைப்பு இருக்கும் என தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் அட்லீயின் தரமான சம்பவத்தை..