ஏன் விஜய் முருகதாஸை மீண்டும் தேர்ந்தெடுக்கின்றார்?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல், பிகில் ஆகிய படங்கள் மெகா ஹிட் அடித்தது.

ஏன் விஜய் முருகதாஸை மீண்டும் தேர்ந்தெடுக்கின்றார்?
விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல், பிகில் ஆகிய படங்கள் மெகா ஹிட் அடித்தது.

இந்த மூன்று படங்களுமே ரூ 250 கோடி வசூலை கடந்து சாதனை செய்தது, இந்நிலையில் விஜய்யின் படத்தை லோகேஷ் தற்போது இயக்கி வருகின்றார்.

இதை தொடர்ந்து அடுத்து விஜய்யின் படத்தை யார் இயக்குகின்றார் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது, பலரும் அருண்ராஜ் காமராஜ், சுதா என்று கூறி வந்தனர்.

ஆனால், நேற்று ஒரு பத்திரிகையாளர் தன் யு-டியுப் தளத்தில் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை சுதா இழந்தார்.

அவருக்கு பதிலாக இப்படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறியுள்ளார், அதை தொடர்ந்து இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகின்றது.

அதே நேரத்தில் முருகதாஸில் கடைசி ஒரு சில படங்களான ஸ்பைடர், அகிரா, சர்கார், தர்பார் ஆகிய படங்கள் ரசிகர்களை மிகவும் சோதித்தது.

இதன் காரணமாகவே விஜய் ரசிகர்கள் மீண்டும் முருகதாஸா? என்று கொஞ்சம் வருத்தத்திலும் உள்ளனர், ஆனால், இது எதுவும் அதிகாரப்பூர்வம் இல்லை.

மேலும், விஜய்க்கு அரசியல் சம்மந்தப்பட்ட கதை என்பதில் எப்போதும் ஒரு ஈடுபாடு இருக்கும், அப்படித்தான் முருகதாஸ் சொன்ன கதையுமாம், அவருடன் மீண்டும் ஒரு அரசியல் களத்தில் இணையவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.