சினிமாவை விட்டு விலகும் இளம் நடிகை!

தெலுங்கில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் புலி படத்தில் அறிமுகமானார். குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வளர்ந்ததெல்லாம் லண்டன் நகரத்தில் தான்.

சினிமாவை விட்டு விலகும் இளம் நடிகை!
Nikisha Patel

தெலுங்கில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் புலி படத்தில் அறிமுகமானார். குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வளர்ந்ததெல்லாம் லண்டன் நகரத்தில் தான்.

கிளாமர், அழகு காட்டி வந்த இவர் தலைவன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். என்னமோ ஏதோ, 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மார்கெட் ராஜா என சில படங்களில் நடித்திருந்தார்.

அவரின் நடிப்பில் ஆயிரம் ஜென்மங்கள் படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவருக்கு பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் இல்லை. சிறிய பட வாய்ப்புகளும் இல்லையாம்.

கையில் இருக்கும் படங்களை முடித்துகொடுத்து லண்டனில் தங்க முடிவெடுத்து விட்டாராம். அங்கு படங்களிலும். டிவி நிகழ்ச்சிகளிலும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.