நர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை!

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது. பலர் இந்நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உலகளவில் இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

நர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை!
Shikha Malhotra

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது. பலர் இந்நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உலகளவில் இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலும் இந்நோய் தோற்று தீவிரமடையாமலிருக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சினிமா பிரபலங்களும் மக்கள் பாதுகாப்பாகவும் கவனமாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கு மாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் நடிகர்கள் இந்திய அரசின் பேரிடர் நிவாரண உதவிக்கா ரூ கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனாவுக்காக மக்களுக்கு உதவும் பொருட்டு மும்பை அரசு மருத்துவமனையில் செவிலியராக தன்னார்வத்துடன் பணியேற்றுள்ளார்.

செவிலியர் பட்டம் பெற்றுள்ள ஷிகா சஞ்சய் மிஷ்ராவுடன் இணைந்து காஞ்ச்லி படத்தில் நடித்துள்ளார்.

அவரின் சேவை மனப்பான்மையை பலரும் பாராட்டியுள்ளனர்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor