கையைவிட்டுப்போன தளபதி64 வாய்ப்பு! இருப்பினும் மகிழ்ச்சியில் ராஷ்மிகா

சமீப காலத்தில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்களில் ராஷ்மிகா மந்தனா முக்கியமானவர். அவர் தற்போது நடிகர் கார்த்தி ஜோடியாக சுல்தான் என்ற படத்தின் மூலம் தமிழில் களமிறங்குகிறார்.

கையைவிட்டுப்போன தளபதி64 வாய்ப்பு! இருப்பினும் மகிழ்ச்சியில் ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா

சமீப காலத்தில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்களில் ராஷ்மிகா மந்தனா முக்கியமானவர். அவர் தற்போது நடிகர் கார்த்தி ஜோடியாக சுல்தான் என்ற படத்தின் மூலம் தமிழில் களமிறங்குகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்து விஜய்க்கு ஜோடியாக தளபதி64 படத்தில் நடிக்கிறார் என முதலில் செய்திகள் வந்தது.

அவரே விஜய் உடன் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக பலமுறை கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்த படவாய்ப்பு நடிகை கியாரா அத்வானிக்கு சென்றுள்ளது என்று தகவல் சமீபத்தில் வந்தது.

இது ராஷ்மிகாவுக்கு சோகமான விஷயம் தான் என்றாலும், தற்போது அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பு ஒன்று வந்திருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.

ஜெர்சி படத்தினை ஹிந்தியில் ஷாஹித் கபூரை வைத்து ரீமேக் செய்யவுள்ளனர். அந்த படத்தில் தான் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.