தனுஷ் ஷமிதாப், அனேகன் என வரிசையாக படங்கள் கொடுத்து இந்த வருடம் தன் கணக்கை ஆரம்பித்தார், இந்த இரண்டு படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர் வரும் ஜுலை 17ம் தேதி மாரி படத்தை ரிலிஸ் செய்யவிருந்தார், அன்றைய தினம் தான் சிம்புவின் வாலு படமும் ரிலிஸாகவுள்ளது.

ஒரே நாளில் இந்த இரண்டு படங்களும் வெளிவந்தால் கண்டிப்பாக வசூல் பாதிக்கும் என்பதை அறிந்து தனுஷ் பின்வாங்குவதாக கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.