சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாகவே வந்துவிட்டார் என்று கூறலாம். உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு மட்டுமே இந்த ஆன்தம் எல்லாம் செய்வார்கள்.

தற்போது சிவகார்த்திகேயனுக்காக ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற ஆன்தம் பிரகாஷ் பாஸ்கர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

இந்த ஆல்பம் குறித்து இவர் கூறுகையில் ‘இது தனிப்பட்ட முறையில் சிவகார்த்திகேயனை முன் உதாரணமாக எடுத்து கொண்டவர்களை கொண்டு உருவாக்கப்பட்டவை.

இவை வெறும் நடிகர்கள் புகழ் பாடும் ஆன்தம் இல்லை, ரசிகர்களை பாசிட்டிவ் கருத்துக்களால் ஊக்கப்படுத்தும் ஒரு ஆல்பமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.