அஜித் தற்போது வேதாளம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். நேற்று தான் இப்படத்தின் கடைசி நாள் ஷுட்டிங்.

அஜித்திற்கு ஆரம்பம் படத்திலேயே காலில் அடிப்பட்டு அந்த இடத்தில் ப்ளேட் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மீண்டும் நேற்று அதே இடத்தில் அடிப்பட்டது.

இதனால், வலியால் அஜித் துடித்தார், படப்பிடிப்பை நிறுத்தலாம் என்று பலரும் கூறியும் அஜித் கேட்காமல் தொடர்ந்து நடித்து கொடுத்துள்ளார்.

Loading...