பின் வாங்கிய சூர்யா, வருத்தத்தில் ரசிகர்கள்

Suriya

சூர்யா நடிப்பில் கடைசியாக வந்த அஞ்சான், மாஸ் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியடைந்தது. இதனால், எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று 24 என்ற படத்தில் நடித்தார்.

இப்படத்தை விக்ரம் குமார் இயக்க, சமந்தா, நித்யா மேனன்ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் முடிந்துவிட்டது, பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தில் அதிக கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால், படம் பொங்கலுக்கு வரவில்லையாம். இந்த செய்தி ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading...