தென்னிந்திய சினிமாவில் புதுபுது முயற்சிகளை படத்திற்கு படம் செய்பவர் சூர்யா. இவரின் கடைசி இரண்டு படங்கள் சரியாக போகவில்லை.

இதனால், இந்த முறை 24 என்ற படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் பேட்டியளித்த விக்ரம் குமார், ‘இந்த படத்தில் ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் தான் சூர்யாவிற்கு மேக்கப் போட்டனர்.

அவர்கள் சூர்யாவின் நடிப்பையும், அர்ப்பணிப்பையும் கண்டு அசந்து போய்விட்டனர்’ என கூறியுள்ளார்.

Loading...