சிவகார்த்திகேயன் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன வேதனையில் உள்ளார். ஏனெனில் அவரின் ரஜினி முருகன் படம் பல மாதங்களாக ரிலிஸாகமால் தள்ளிப்போகின்றது.

இந்நிலையில் நேற்று இப்படத்தை பிப்ரவரி மாதம் வரை தள்ளிப்போட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் அத்தனை நாட்கள் தான் வேண்டாம், உடனே ரிலிஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம்.

இதனால், இப்படம் இந்த மாதத்திற்குள் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை படம் சொன்ன தேதியில் வெளிவரும் எனவும் கூறியுள்ளார்களாம்.