விக்ரமின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? அதிரடி முடிவு

Vikram
Vikram

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் வித்தியாசமான முயற்சிகளை செய்து வருபவர் விக்ரம். படத்தின் வெற்றியில் இருந்த விக்ரம் ரசிகர்களுக்கு 10 எண்றதுக்குள்ள தோல்வி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் தன் ரசிகர்களை சந்தோஷப்படுத்த அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஆனந்த ஷங்கர் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து இவர் திரு இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். திரு, தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிவப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர். இதில் கடைசி இரண்டு படங்கள் தோல்வி என்றாலும் மிக தைரியமாக விக்ரம் தன் கால்ஷிட்டை கொடுத்துள்ளாராம். இம்முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading...