விஜய்யின் மார்க்கெட் தற்போது தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் பல படங்கள் ஹிந்தி டப்பிங் செய்து யு-டியுபில் வெளியிடப்படுகின்றது.

இந்த படங்கள் அனைத்தையும் பலரும் பார்த்து ரசிக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் சச்சின் படம் யு-டியுபில் ஒரு சாதனையை படைத்துள்ளது.

இப்படம் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதன் மூலம் விஜய்க்கு வட இந்தியாவிலும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்று தெரிகிறது.