ஈரானிய-பிரெஞ்ச் இயக்குனரான மரியான் சத்ராபி இயக்கும் ஹாலிவுட் படவுலகில் தனுஷ் நுழையவுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் ‘சான் ஆண்ட்ரியாஸ்’ படத்தின் நாயகி அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ மற்றும் உமா தர்மன் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள்.

ஆங்கில காமிக் நாவலை தழுவி இப்படம் தயாராக உள்ளது. ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறும்போது, முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்துள்ளது.

நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சத்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம் என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அமசங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன் என்று கூறினார்.

இப்படத்தின் படப்பிடிப்புகளை இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, மொராக்கோ ஆகிய நாடுகளில் படமாக்கவுள்ளனர். இந்த வருடத்தின் இடையில் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.