சூர்யா தற்போது ஒரு மாஸ் ஹிட்டிற்காக காத்திருக்கின்றார். இதற்கு பலனாக கண்டிப்பாக 24 படம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே அஞ்சான், மாஸ் என இரண்டு படங்களும் தன் ரசிகர்களை ஏமாற்றியதாம், மிகவும் வருத்தத்தில் இருக்கும் சூர்யா, 24 படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளாராம்.

இதற்கு மேல் நடிக்க முடியாது என்ற அளவிற்கு தன்னை மிகவும் வருத்திக்கொண்டு நடித்துள்ளாராம். இப்படத்தின் டீசர் மார்ச் முதல் வாரத்தில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.