அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையின் இப்படத்தில் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வருமாம்.

பில்லா, பில்லா 2 உள்பட பெரும்பாலான திரைப்படங்களில் அஜித் கோட், சூட் காஸ்ட்யூமில் நடித்து வந்த நிலையில் இந்த கெட்டப்பை ‘என்னை அறிந்தால்’ இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் ‘வேதாளம்’ இயக்குனர் சிவா ஆகியோர் மாற்றினர் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் பில்லா போன்று கேங்ஸ்டர் கதையாம், இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதால் அதற்கேற்றவாறு கோடு சூட் போட்டால்தான் செட் ஆகும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்திற்காக வெளிநாடுகளில் லொக்கேஷன் பார்க்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ‘அஜித் 57’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலும், பூஜை மே முதல் வாரத்திலும் ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது முறையாக இணையும் அஜித்-சிவா கூட்டணியின் இந்த படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கான ஒரு கமர்ஷியல் விருந்தாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...