சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இவரின் ரெமோ படத்தை தமிழில் இதுவரை தன் முந்தைய படத்திற்கு இல்லாத தொகைக்கு வியாபாரம் செய்யவுள்ளாராம். இதுமட்டுமின்றி ரெமோ படம் எவ்வளவு வியாபாரம் ஆகின்றதோ அதை விட ரூ 10 கோடி அதிகமாகவே மோகன்ராஜா படத்தை விற்க முடிவு செய்துள்ளாராம்.

ஏனெனில் இவர் நடித்து இதுவரை எந்த படமும் தோல்வியை சந்திக்கவில்லை, இதன் காரணமாகவே கொஞ்சம் அகலக்கால் வைத்து பார்த்து விடலாம் என முடிவு செய்ய, இந்த செய்தி தற்போதே விநியோகஸ்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...