தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி வேறு ஒரு உயரத்திற்கு சென்று விட்டார். இவர் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நேற்று பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கௌதம் மேனன், தனுஷை பேட்டி எடுப்பது போல் ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டது.

இதில் தேசிய விருது பெற்ற தருணம் எப்படியிருந்தது? என கௌதம் கேட்க, தனுஷ் ‘உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த நேரத்தில் என்னால் சிரிக்க கூட முடியவில்லை, ஏனெனில் ரஜினி சார் உடல் நிலை முடியாமல் இருந்தார், அவரை அப்படி பார்த்துவிட்டு என்னால் எப்படி சிரிக்க முடியும்?’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.