வித்தியாசமான வேடங்கள் ஏற்று அசத்துவதில் கமலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் விக்ரம் தான்.

இவர் காசி, பிதாமகன், சேது, ஐ என பல படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார். தற்போது இவர் நடித்துவரும் படம் இருமுகன். இப்படத்திலும் இருவேறு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடிக்க இருக்கிறாராம். இதற்காக வித்தியாசமான உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளாராம். ஏற்கனவே கந்தசாமி படத்தில் பெண் வேடமிட்டு அசத்தியிருப்பார்.

இப்படம் வரும் விநாயகர் சதுர்த்தியன்று ரிலிசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக நயன்தாராவும், நித்யா மேனனும் நடித்துள்ளனர்.