ஒரு இயக்குனர் படம் ஹிட் என்றால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம், அதே படம் ப்ளாப் என்றால் பாதளத்திற்கு தள்ளி விடுகிறோம். அந்த வகையில் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இயக்குனர் லிங்குசாமியை கிண்டல் செய்து பல வசனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இதை எதிர்த்து பல திரைப்பிரபலங்கள் தங்கள் ஆதரவை லிங்குசாமிக்கு அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி தன் பேஸ்புக் பக்கத்தில் “இங்கு வெளியாகும் எல்லா திரைபடங்களும் முழு அர்பணிப்பு உணர்வுடன் எடுக்கப்பட்டு, நிச்சியமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன்தான் வெளியடப்படுகிறது.

அப்படி வெளிவரும் திரைப்படங்களின் நிறை குறைகளை அலச எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் திரைப்படக் கலைஞர்களின் மனம் புண்படும்படியான தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.