தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி. சமீபத்தில் சொல்லிக் கொள்வது போல் வெற்றிப் படங்கள் எதையும் தரவில்லை நடிகர் கார்த்தி. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள மெட்ராஸ் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் கார்த்தி மகிழ்ச்சியடைந்துள்ளார். நேற்று சென்னையில் டைரக்டர் ரஞ்சித், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் முரளி ஆகியோருடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் கார்த்தி.

அப்போது, அவர் கூறியதாவது :-

நான் நடித்த மெட்ராஸ் படம் வெற்றிகரமாக ஓடுகிறது. ரசிகர்களிடம் இருந்து நல்ல படம் என்று பாராட்டுகள் குவிகின்றன.

பேஸ்புக், டுவிட்டரிலும் படத்தை புகழ்ந்து கருத்துகள் பதிவு செய்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

மெட்ராஸ் படத்தில் நிறைய புதுமுகங்கள் உள்ளனர். எல்லோருமே சிறப்பாக நடித்து இருந்தனர்.

இயக்குனர் ரஞ்சித் கடுமையாக உழைத்து படத்தை எடுத்து இருந்தார். வட சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

அப்பகுதி மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இரவு 2 மணி வரை மற்றும் விடிய, விடிய என்றெல்லாம் படப்பிடிப்பு நடந்தது.

இந்த படம் மாதிரி நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன். நல்ல படம் எடுத்தால் உலகம் முழுவதும் ரசிகர்கள் வரவேற்பார்கள். ஊக்கமும் அளிப்பார்கள்.

அடுத்து கொம்பன் படத்தில் நடிக்கிறேன். அது குடும்ப பாங்கான கதை’ என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Loading...