ஒவ்வொரு வருடம் பிறக்கும் போது தவறாமல் ஒரு கருத்து கணிப்பு வந்துவிடும். அந்த வகையில் இந்த வருடம் தமிழில் அதிகம் இணையத்தில் தேடிய நடிகர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தான் சூர்யா, அஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக கத்தி படத்தின் சர்ச்சையும் ஒன்று என கூறப்பட்டுள்ளது. சென்ற வருடமும் விஜய் தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.