தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகர்களுடன் மட்டும் நடிப்பவர் த்ரிஷா. இவர் தற்போது கமலுடன் தூங்காவனம் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் ஸ்லீப்லெஸ் நைட் என்ற படத்தின் ரீமேக் என கிசுகிசுக்கப்படுகின்றது. சமீபத்தில் வந்த தகவலின் படி, த்ரிஷா இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

இதை வைத்து பார்க்கையில் த்ரிஷாவின் இத்தனை ஆண்டு கலைப்பயணத்தில் போலிஸ் அதிகாரியாக நடிப்பது இதுவே முதன் முறை.